Wednesday, November 11, 2009
என் மனதின் விம்பங்கள்..
விருப்பு வெறுப்புக்கள் என்பது ஒவ்வொருவரினதும், இரசனைகள், உணர்வுகள் சம்பந்தப்பட்டதாக உள்ளன. எல்லோரது விருப்பு வெறுப்புக்களும் ஒன்றாகவே இருந்துவிட்டால் உலகத்தில் சாந்தி என்ற சங்கீதம் எப்போதும் சுபம் ஏந்தி வந்து கொண்டே இருக்கும் அல்லவா?
இதேவேளை விருப்பு வெறுப்புக்கள், வயது, மாறும் சூழ்நிலைகள், சேரும் கூட்டத்தினர் சம்பந்தப்பட்டும் உள்ளது என்பது என் அனுபவங்களின் ஊடாக நான் கண்ட உண்மை. ஆக விருப்பு வெறுப்புக்கள் மாற்றத்திற்கு உள்ளாகும் என்பதுகூட ஒருவகையில் உண்மையே.
இந்த நேரத்தில் தொடர்பதிவுக்கு பதிவர்களை அழைக்கும், தொடர்பதிவுகள் என்பது என்னைப்பொறுத்தவரையில் ஆரோக்கியமான விடயமே, ஏனென்றால் இதன்மூலம் பதிவர்களிடையே ஒரு நட்புறவு ஏற்படுவது மட்டும் அன்றி, மற்றபதிவரின் விருப்புக்களையும், வெறுப்புக்களையும் அறியும் ஆவலும் பூர்த்திசெய்யப்படுகின்றது.
இந்த நிலையில் என் மதிப்புக்கும், அன்புக்கும் உரிய பன்முக திறமைகள் கொண்ட அண்ணன் ஜனா அவர்களின் தொடர்பதிவு அழைப்பு எனக்கும் விடுக்கப்பட்டுள்ளது. அவரின் அன்பு அழைப்பினை ஏற்று நானும் இங்கு எனது, மனதுக்கு பிடித்தவைகளையும், மனதுக்கு தூரமானவைகளையும் பதிந்து செல்கின்றேன்.
01. என் மனதில் என்றும் தலைவர் என்ற அந்தஸ்துடன் நிரந்தமாக இருப்பவர்
என் தலைவா.;
தலைவனாக இருப்பதற்கு தகுதி அற்றவர் என என்மனதினால் ஒதுக்கப்பட்டவர்
தனக்குத்தானே விருதுகள் கொடுத்து, வியந்து மகிழ்பவர்.
02. இசை என்னும் திரையிசை அமைப்பினால் என் மனதுக்குள் உட்கார்ந்து
மணியடித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இசையினால் நான் லகிப்பதால் இசையினை எப்போதும் பிடிக்கும், ஆனால்
அமைதியான பாடல்களைக்கூட, மீள்கலவை என்ற பெயரில் ஓலங்கள்
ஆக்குபவர்களை எனக்கு பிடிக்காது.
03. திரைத்துறையில் நடிப்பினால் என் இதயம் கவர்ந்தவர் கமல்ஹாசன், அதேபோல
நடிப்பினால் என் மனத்தினால் என் மனதுக்கு தூரப்பட்டவர் சிறி காந்த்
04. மனது கவர்ந்த விளையாட்டு துடப்பாட்டம் என்பதால், துடுப்பாட்டத்தில் இதயத்தில் ஆடியர் சௌரவ் கங்குலி, என்ன காரணம் என்று தெரியாமல் மனது
மறுப்பவர் யுவராஜ் சிங்.
05. திரையிசைப்பாடல்களால் என் மன இசை வெற்றிட பள்ளத்தாக்கை அழகாக
நிரப்பியவர் ஹரிகரன், பாடகர்கள் தெரிவில் முளைக்குமுன்னரே நடுவராக இருந்து திமிராக அநாகரிகமாக பேசிய கிரிஸ் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.
06. நிறங்களில் எனக்கு மேகநீலம் எப்போதும் பிடிக்கும், அதேபோல கறுப்பு
என்பதில் எப்போதுமே எனக்கு வெறுப்பு.
07. திரைப்படத்தை, அதன் கலைத்துவத்துடன் கண்முன் நிறுத்தும் இயக்குனரில்
எனக்கு பாலுமகேந்திராவை ரொம்ப பிடிக்கும், ஆறு குத்துப்பாட்டு, ஏழு சண்டை 3 காதல்காட்சி என்று படம் எடுப்பவர்களை மனம் வெறுக்கும்.
08. என் மனதில் கவிஞராக எப்போதும் தெரிபவர் கவிஞர் கண்ணதாசன்தான்,
பிடிக்காத கவிஞர்கள் என யாரும் இல்லை, கிறுக்கல்களைக்கூட இரசித்துப்
புடிப்பவன் நான் அந்த கிறுக்கல்கள்கூட நாளை சித்திரமாகலாம் என்ற
நம்பிக்கையில்
09. எழுத்துக்களில் எப்போதும் ஜெயகாந்தனின் எழுத்துக்களில் எனக்கு போதை
அதிகம்தான். அதேபோல சுயலாபங்கள், சுயதிணிப்புக்கள் என்பவற்றை திணிப்
பவர்கள் எழுத்துக்களால் என் மனதில் இருந்து தூரப்போபவர்கள்.
10. எனக்கு எப்போதும் பிடித்தமான நாடு, மலரப்போகும் எம் விடுதலை நாடுதான்.
துரோகங்களால் எங்கள் முதுகில் குற்றி மேலும்மேலும் துரோகமிளைக்கும்,
இந்தியா என்ற நாடுதான் நான் வெறுக்கும்நாடு.
இந்த பதிவினை தொடர பலரை அழைத்து நான் சிரமங்கள் கொடுக்கவில்லை,
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்ற அந்த ஆலமரத்தின் விழுதுகளில் பண்பாடி
அன்றே சுரம்பயின்ற என் மூத்தவர் ஜனா அண்ணா, அதே ஆலமரத்தில் ஒதுங்கிநின்ற என்னை அழைத்தார், இப்போ நானோ..அதே ஆலமரத்தில் விளையாடித்திரிந்த என் இளவலான கனககோபியை இந்த தொடர்பதிவுக்கு அழைக்கின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
//06. நிறங்களில் எனக்கு மேகநீலம் எப்போதும் பிடிக்கும்//
ReplyDeleteஎங்கள் கல்லூரி எங்களுக்கு கல்வியை மட்டுமல்ல இந்த நிறத்தின் விருப்பையுமல்லவா அள்ளித் தந்திருக்கிறாள்...
வியப்பேதும் இல்லை அதில்...
அழைப்புக்கு நன்றி..
நிச்சயமாக தொடர்கிறேன்...
(ஏற்கனவே 3 தொடர் பதிவு அழைப்புகள் வந்திருப்பதால் அவற்றை முடித்துவிட்டு தொடர்கிறேன்...)
உங்களை யாழ் மத்திய கல்லூரியின் மாணவன் என்று எனக்கு முன்னர் தெரியாது...
அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி....
அடடா..கல்லூரி காலங்களை நினைவு படுத்திவிட்டீங்களே சயந்தன்.
ReplyDeleteபல ஞாபங்கள் தாலாட்ட தொங்கிவிடுமே..
அந்த பசுமையான நிலாக்காலங்கள் இன்றும் என் நெஞ்சில் பத்திரமாக அடைகாக்கப்படுகின்றது.
உங்கள் கடைசி விருப்பு வெறுப்பு நெற்றி அடி. வாழ்த்துக்கள்.
ReplyDelete