Monday, November 2, 2009

நதிவழி போகும் பயணங்களில்….


தமிழுக்கும், தமிழ்தாய்க்கும் பாதம் பணிந்து வலைப்பதிவுகள் என்னும் இடுகைக்கு புதியவனாக நதிவழியே எனது வலையுலக பிரவேசத்தை வெள்ளோட்டம் செய்துகொள்கின்றேன்.

தனிமை வாட்டும் இராக்காலப்பொழுதுகளில், இலக்கியப்படைப்புக்களில் பார்வை புதைத்து கிரயம் செய்துவிட்டு, முகடுபார்த்து சரியும்போது, மனதில்தோன்றும் அசரீதியான, என் எண்ணங்கள் அந்த இராக்காலங்களுடன் விடைபெற்றுக்கொள்கின்றன.

உத்தரவின்றி உள்ளே வந்த அந்த சிந்தனைகள், நிலமில்லா விதைகளாக காற்றில் கலந்துபோன நாட்கள் கடந்து, வலைப்பதிவெனும் இந்த ஆளமான நிலத்தில், நதிவழியில் பயணித்து நதி பிரவாகம் கொள்ளும் கரைவழியே தூவிவிட்டு செல்கின்றேன். அவை இப்படித்தான், இந்த மரம்தான் முளைக்கும் என நிச்சயம்படுத்திக்கொள்ள முடியாது. இந்த விதைகளில், கற்பக தருக்களும் முளைக்கலாம், காஞ்சோண்டிகளும் எட்டிப்பார்க்கலாம். நிச்யமாக நச்சுசெடிகள் மட்டும் முளைக்காது.

நதி வழியில் என் பயணங்களை தொடக்கிவைத்த அன்பு நண்பர், பிரபல எழுத்தாளர், பதிவர் அண்ணன் ஜனா அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, அதேவேளை இலக்கிய தாகத்தை அவருடன் சேர்த்து என்னுள் விதைத்த பதிவுலக நண்பர்களான அடலேறு, எவனோ ஒருவன், நிலாரசிகன் ஆகியோருக்கும் மனங்கனிந்த நன்றிகளுடன் இந்த ஓடை நிதியாகின்றது.

என்றும் அன்புடன்
சயந்தன்.

13 comments:

 1. பதிவுலக வருகைக்கு நல்வரவும், வாழ்த்துக்களும் உரித்தாக சயந்தன்.
  தங்கள் கருத்துக்கள் காத்திரமானவை என்பது எனக்கு தெரியும். அதுபோல எழுத்துக்களும் இருக்கும் என நினைக்கின்றேன்.
  அப்புறம் பிரபல என்று ஒன்றும் இல்லை, நானும் உங்களைப்போல சாதாரணமானவன்தான். தொடர்ந்து அசத்துங்கள்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் நண்பா, தமிழ் வலைபதிவுலகிக்கு அன்புடன் வரவேற்கிறேன். தமிழ் உங்கள் எழுத்துக்களில் விளையாடுகிறது.தலைப்பும், எழுத்துநடையும் ரசனை.

  ReplyDelete
 3. //தமிழுக்கும், தமிழ்தாய்க்கும் பாதம் பணிந்து வலைப்பதிவுகள் என்னும் இடுகைக்கு புதியவனாக நதிவழியே எனது வலையுலக பிரவேசத்தை வெள்ளோட்டம் செய்துகொள்கின்றேன்.
  //
  வருகைக்கு வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 4. அற்புதமாய் உள்ளது நடை....படிக்கும் பொது கங்கையில் நீராடுவதை போல் இருந்தது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. ஆதித்தியன்November 3, 2009 at 9:28 AM

  வரவிலேயே அற்புதமான தமிழ் எழுத்துக்களுடன் களம் இறங்கியுள்ளீர்கள். நதிவழி என்ற பெயரே மிக அற்புதமான தெரிவு. தங்கள் எழுத்துநடை சுண்டி இழுக்கின்றது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. எழுத்துநடை நன்றாகத்தான் இருக்கு, ஜனா அண்ணா சயந்தன் நிறைய பயணக்கட்டுரைகளை தருவார் என்று சொன்னாரே!
  பயணங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. //பதிவுலக வருகைக்கு நல்வரவும், வாழ்த்துக்களும் உரித்தாக சயந்தன்.
  தங்கள் கருத்துக்கள் காத்திரமானவை என்பது எனக்கு தெரியும். அதுபோல எழுத்துக்களும் இருக்கும் என நினைக்கின்றேன்//

  நன்றிகள் ஜனா அண்ணா. முதலில் தங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லியாகவேண்டும். தங்கள் நம்பிக்கைபோலவே என் பதிவுகளும் அமையும் என்று திடமாக நம்புகின்றேன். நன்றி அண்ணா.

  ReplyDelete
 8. //வாழ்த்துக்கள் நண்பா, தமிழ் வலைபதிவுலகிக்கு அன்புடன் வரவேற்கிறேன்.//

  நன்றிகள் அன்பு நண்பர் அடலேறு.
  தங்கள் நட்பு கிடைத்ததும், தங்களுடன் பதிவுலகில் இணைவதும் சந்தோசமே. பாராட்டுக்களுக்கும் நன்றி

  ReplyDelete
 9. //அற்புதமாய் உள்ளது நடை....படிக்கும் பொது கங்கையில் நீராடுவதை போல் இருந்தது வாழ்த்துக்கள்//

  நன்றிகள் வெண்ணிற இரவுகள். தங்கள் தளத்திற்கும் வந்துபார்த்தேன் கவிதைகள் அபாரம். தங்கள் நட்பு கிடைத்து என் பாக்கியம். நன்றிகள்.

  ReplyDelete
 10. //நதிவழி என்ற பெயரே மிக அற்புதமான தெரிவு. தங்கள் எழுத்துநடை சுண்டி இழுக்கின்றது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் ஆதித்தியன்.
  பெயர் மனத்தில் கணப்பொழுதில் விழுந்தபெயர்தான். தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 11. //ஜனா அண்ணா சயந்தன் நிறைய பயணக்கட்டுரைகளை தருவார் என்று சொன்னாரே!//

  வாருங்கள் நண்பர் டிலான். ஆம் நிற்சயமாக நான் தொகுத்துவைத்திருக்கும் எனது பயணங்கள் பற்றிய கட்டுரைகள் வெகுவிரைவில் வலையேற்றுவேன். தங்கள் வலைப்பிரவேசத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. பதிவுலகத்திற்கு வரவேற்கிறேன்....
  தொடர்ந்து கலக்குங்கள்....

  ReplyDelete
 13. வாழ்த்திற்கு நன்றிகள் கனககோபி அவர்களே. தொடர்ந்தும் இணைந்திருப்போம்.

  ReplyDelete