Tuesday, November 10, 2009

மனம் ஒரு சிம்பான்ஸி..


கண் இமைப்பொழுதுகளிலும் அசதியின்றி, சிந்தித்த வண்ணமே இருக்கின்றதே இந்த மனம். இதற்கும் ஒரு ஓய்வுவேண்டாமா? என சிலவேளைகளில் அந்தமனமே சிந்திக்கும்.
மனதை ஒருநிலைபடுத்த எடுத்தமுயற்சிகள் எல்லாவற்றிலும் வென்றது மனந்தான்.
மனம் ஒருபொழுதுகளில் தேவதையாகத்தோன்றும், பல பொழுதுகளில் சாத்தானாகவே ஆடும். சில பொழுதுகளில் சிலிர்க்கவைக்கும், பல பொழுதுகளில் திடுக்கிடவைக்கும். மனதிற்கு கடிவாளம்போட்டு தம் கட்டுப்பாட்டினுள் கொண்டுசென்றவர்கள் சித்தர்கள் ஆகினர், ஞானியர் ஆகினர்.
மனம் சொன்னதை செய்பவர்கள் பைத்தியக்காரர்கள் ஆகினர்.
மொத்தத்தில் உலகத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் மனம் என்னும் கனமே.

மனம் ஒரு விநோதமானது, அது பற்றி ஆழமாக பல விடயங்களை சிந்தித்து, ஒரு முடிவுக்கு வரும்போதும் “இவ்வளவு நேரமும் சிந்தித்தது நான்தானே” என்று சொல்லி ஏளனம் செய்யும். நினைக்கக்கூடாதவைகளை எல்லாம் அடிக்கடி நினைக்கும்.
நினைக்கவேண்டியவற்றை வேண்டும் என்றே ஒழித்துவைக்கும்.
பல முடிவுகளின் ஆரூடங்களை அது சரியாகவே சொல்லிவிடும். எங்கள் பலத்தினை பெரிதுபடுத்தாமல், எங்கள் குறைகளையே குத்திக்காட்டிக்கொண்டு நிற்கும். பெரிய வெள்ளைத்தாளில் ஒரு சிறிய கரும்பள்ளி இருந்தால் கரும்புள்ளியைத்தான் கவனித்துப்பார்க்கும்.

நெடுநாள் பழகிய நண்பனுடன் பிரச்சினை உண்டானால், அவனுடன் பழகிய வசந்தமான நாட்கள், அவன் நமக்கு செய்த உதவிகள், மகிழ்ச்சியான தருணங்களை அப்படியே அழித்துவிட்டு, அவனது குறைகளையும், அவனது கோரத்தோற்றத்தையுமே அடிக்கடி காட்டும்.
மனம் விந்தையானதுதான், இப்படித்தான் வரவேண்டும், இப்படித்தான் நடக்கும் என உறுதியாக இருந்தால் எமக்கு அப்படித்தான் வரும், அப்படித்தான் நடக்கும்.

காமக்கழிப்பிலும், மென்மையான இசை லயித்தலிலும் மட்டும்தான் மனம் ஒன்றை நினைப்பதாக இருக்கின்றது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
மனதினாலே மார்க்கங்களும் பல உண்டு. மனமிருந்தால்; இடமுண்டு என்பது எவ்வளவு உண்மையான தத்துவம். எம்மை இயக்குவதே அதுதானே.
இராக்காலங்களின் மனதின் ஆதிக்கம் உச்சமாக இருக்கும். எங்களை வெருட்டி தன்வழிக்கு கொண்டுவர மனம் எடுத்துக்கொள்ளும் நேரம் பெரும்பாலும் இராக்காலங்களே.

மனதை கட்டுப்படுத்துவது பெரிதல்ல, மனதை மலரச்செய்தலே இங்கே முக்கியம். எங்கள் வெளி அறிவு, நல்லறிவுகளை மட்டும் மனம் கொள்ளச்செய்ய பயிற்சி எடுத்தலே மனதை மலரச்செய்யும் மார்க்கமாகும்.
அதற்குக்கூட மனம் இருந்தால்த்தான் இடம் உண்டு.
“இப்போது சொல்லுங்கள் மனம் வரமா? சாபமா?”

8 comments:

 1. //காமக்கழிப்பிலும், மென்மையான இசை லயித்தலிலும் மட்டும்தான் மனம் ஒன்றை நினைப்பதாக இருக்கின்றது என்கின்றனர் அறிவியலாளர்கள்.//

  உண்மை தான்...
  காமக்களிப்பைத் தானே முழு மனவிருப்புடன் செய்கிறோம்?
  மென்மையான இசையை இரசிக்கத் தெரிந்தோர் குறைந்துவருகிறார்கள். அப்படி இரசிப்பவர்கள் நிச்சயமாக அமைதியான மனத்துடன் தான் இரசிப்பார்கள்...

  //மனதை கட்டுப்படுத்துவது பெரிதல்ல, மனதை மலரச்செய்தலே இங்கே முக்கியம். //

  அற்புதமான வசனம்.... நிச்சயமாக இதை மனதில் ஞாபகப்படுத்திக் கொள்ள முயல்வேன்...

  நல்ல பதிவு...
  வாழ்த்துக்கள் சகோதரா...

  (word verification தை் தூக்கிவிடுங்கள். அப்போது தான் கருத்துரை அளிக்க விரும்பவார்கள்.)

  ReplyDelete
 2. ஓ! நீங்கள் புதிய பதிவர் என?
  பதிவுலகிற்கு வரவேற்கிறேன்...
  தொடர்ந்து எழுதுங்கள்...

  திரட்டிகளை நன்றாகப் பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவை நிறைய இடங்களுக்கு கொண்டு செல்லுங்கள்...

  ReplyDelete
 3. இது வரமான சாபம்

  ReplyDelete
 4. மனம் போடும் புதிர்களை பதிவாக்கிய முறை அருமை. பாராட்டுக்கள் சயந்தன்.

  ReplyDelete
 5. "மனங்களை மலரவேண்டும்" என்ற உங்களின் முடிவு நன்றாக உள்ளது. உண்மைதான் எதற்கும் மனம் உண்டானால்த்தான் இடமுண்டு.

  ReplyDelete
 6. மனம் ஒரு சாபம்தான்,

  அதை வரமாக்குவதும் மனதின் கையில்தான் :))

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 7. Very inquistive posting. Congratulations at the first step to understand mind.
  Kannan

  ReplyDelete
 8. Manam oru mantira savi...Don't control your mind...try to understand it...and become like a friend with that...then everything goes favor to u...

  ReplyDelete